
திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோனியார் கோவில் 46 ஆம் மாபெரும் அன்னதானம்.
மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோணியார் கோயில் 122 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 01.06.23 வியாழக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இவனைத் தொடர்ந்து இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மாலை 6 மணிக்கு அர்ச்.அந்தோணியாரின் நவநாள் தேர் பவனி கோயிலை சுற்றி வந்தடைந்தது.
இதன் தொடர்ச்சியாக திங்கள் இரவு எட்டு மணி அளவில் கோவிலில் இருந்து அந்தோணியார் திரு உருவச்சலை தேர் பவனி தொடங்கி ஒத்தக்கடை பீமநகர் வழியாக சென்று மீண்டும் கோயில் வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தோனியாரின் அருள் பெற்றனர்.

செவ்வாய்க்கிழமை இரவு உள்விதி தேர் பவனி நடைபெற்றது.
மேலும் நேற்று புதன்கிழமை இரவு 46 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்தஅன்னதான நிகழ்ச்சியினை ஆலய நிர்வாக குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

