Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காலாண்டு வரி செலுத்த ஜூன் 15 கடைசி தேதி.வருமான வரித்துறை மண்டல இணை ஆணையர் தகவல்.

0

'- Advertisement -

நிகழாண்டு காலாண்டு வரி
ஜூன் 15 ம் தேதி கடைசி கடைசி.
வருமான வரித்துறை மண்டல இணை ஆணையர் தகவல்

திருச்சியில், வருமான வரித்துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மண்டலம் 1, இணை ஆணையர் ஜெ.புவனேஸ்வரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். வருமான வரி செலுத்தும் நடைமுறைகள், அதாவது காலாண்டுக்கு ஒருமுறை முன்கூட்டியே வரிசெலுத்தும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. மேலும் நிகழாண்டு காலாண்டு வரியை முன்கூட்டியே செலுத்த ஜூன் 15 ஆம் தேதி இறுதி எனவும் முகாமில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் வருமான வரித்துறை அலுவலர்கள் ஜான் ரஸ்ஸில், சாய்குமார் மற்றும் வணிகர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.