விடியா திமுக அரசை கண்டித்து அமமுக கண்டன பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக டிடிவி தினகரனின் ஆணைப்படி, திருச்சி மாநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாட்டில் ஜீன்12ல் டிடிவி தினகரன் தலைமையில், விடியா அரசின் அவலங்களை கண்டித்து நடைபெறு உள்ள மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில்,
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக பங்கேற்பதை பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளரும் கவுன்சிலருமான செந்தில்நாதன் ஏற்பாட்டில் அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக ஒரத்தநாட்டில் நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என
ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

