Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு.

0

'- Advertisement -

 

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் பல லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு.

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39).இவரிடம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரை சேர்ந்த ஷாஜகான் என்பவர் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முதல் கட்டமாக ரூபாய் 75 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். பிறகு அடுத்த கட்டமாக ரூபாய் பல லட்சம் பணம் கொடுத்துள்ளார். மேலும் அவருடைய நண்பர்கள் ரஞ்சித் குமார், அருள்ஜோரன், குமார் ஆகியோர்க்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஷாஜகானிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட ஷாஜகான் சிறிது நாட்களுக்கு பிறகு வேலையும் வழங்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை இதனால் சந்தேகமடைந்த அருள் மாணிக்கராஜ் இதுகுறித்து விசாரித்த போது தானும், நண்பர்களும் சேர்ந்து ஷாஜகானிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அருள் மாணிக்கராஜ் புகார் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பாப்பா காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 47)இவரிடம் ஆன்லைனில் மூலம் திருவாரூர் மாவட்டம் தில்லை வளாகம் தெற்கு காடு கிராமத்தை சேர்ந்த வேலரசன் மற்றும் வைரவேல் ஆகிய இருவர் அறிமுகமாகி கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலுவை நம்ப வைத்தனர். இதனை நம்பிய பாலு, தனக்கும் தன்னுடைய நண்பர்கள் 8 பேருக்கும் கனடாவில் வேலை வாங்கித் தர ரூபாய் 12 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
பிறகு சிறிது காலத்துக்கு பிறகு வேலையை வாங்கி கொடுக்காமல் இருவரும் இழுத்தடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பாலு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது சரிவர பதில் கூறவில்லை. இது தொடர்பாக பாலு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வேலரசன், வெற்றிவேல் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.