திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த பயிலரங்குக்கு மாநில செயலாளர் நெல்லை.ஆறுமுகம்
மாநில தலைவர் இல.சீதரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு ஐயப்பன், சுப்ரமணியன்,
,ராஜகோபால், சௌந்தரராஜன், மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு தேவதாஸ், மணி, ராஜமோகன். ராமதாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் மனோகரன் வரவேற்புரை ஆற்ற மாநில துணைத்தலைவர் முருகேசன்.துவக்க உரையாற்றினார்.
முடிவில் கௌரவத் தலைவர் பரமேஸ்வரன் நிறைவுரை உரையாற்ற மாவட்ட செயலாளர் ராமதாசு நன்றி உரையாற்றினார்.
இந்த பயிலரங்கில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட, கோட்டநிர்வாகிகள் மற்றும் முன்னணி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.