Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் 10,11,12.ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடைகால முகாம்.

0

'- Advertisement -

 

திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் அர்ஜுன். மற்றும் கார்த்திகேயன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:

இளைய பாரதம் சேவா அறக்கட்டளை 1996 முதல் தமிழகம் முழவதிலும் மற்றும் பொதுமக்களுக்குதேவையான பல்வேறு சேவா பணிகளை செய்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்க கூடிய மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஆளுமை திறன் பயிற்சி நிகழ்ச்சிகள், இரத்த தான முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு போன்ற பல்வேறு சேவா பணிகளை செய்து வருகிறது.

கோடை கால முகாம் என்பது மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்திட .இளைய பாரதம் சேவா அறக்கட்டளையின் ஒரு முயற்சியாகும். இனைய பாரதம் சேவா அறக்கட்டளை திருச்சி சார்பாக 10.11,12 ம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்களுக்கு தங்களது எதிர்காலத்தை சிறந்த முறையில் தேர்வு செய்ய மே மாதம் 2 முதல் 4 தேதி வரை “IGNTED MINDS” (SUMMER CAMP – 2023) திருவானைகோயில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோடைகால முகாம் ஏற்பாடாகியுள்ளது.

மாவட்டம் முழுவதிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இம்முகாமில் வேத கணிதம், பேச்சு பட்டறை, ஓவியம் வரைதல், தனி நபர் ஆளுமை திறன் பயிற்சிகள். யோக மற்றும் தியானம், களப்பயணம், கலாமின் கனவுகள், விளையாட்டுகள், உயர்கல்வி வழிகாட்டுதல்கள் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள், மனநலம், ஆரோக்கியமான வாழ்கை பழக்கம், காவேரியை பாதுகாத்திட போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இம்முகாமில் திருச்சி மாவட்டத்தில் 10,11,12 படிக்க கூடிய மாணவர்கள் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம். முகாம் நுழைவுகட்டனம் -300 கலந்து கொள்ளுகின்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அர்ஜுன்மற்றும் டாக்டர். கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்.

முகாம் குறிந்து தொடர்புக்கு: 9790593288, 9048459905 ,
9940373353

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.