Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல கோடி மோசடி புகார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.

0

 

பல கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த

தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார். மேலும் தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி தமிழகம் முழுவதும் நூற்றுகணக்கானோர் முதலீடு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.19ந்தேதி கமாலுதீன் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து முதலீடு செய்தவர்கள் அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதார் அப்துல் கனி ஆகியோரிடம் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில்
இதுவரை சுமார் 6,131 பேரிடம், சுமார் 410 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதுவரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மோசடிக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கமாலுதீன் சகோதரர் அப்துல்கனி (வயது54) என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.