திருச்சி:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்
நிலத்தடி நீரை சேமிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.
திருச்சி எடமைலைப்பட்டிபுதுர் ராமசந்திர நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் உலக தண்ணீர் தினத்தில் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வீதிகளில் வீசபடுவதால் விவசாய நிலம் நீர்நிலைகள் நிலதடி நீர் உள்ளிட்ட வைகள் பாதிக்க படுவதை தடுக்கும் வகையில் மக்கும் வகையிலான பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு பழ வகையிலான கொய்யா மாதுளை மற்றும் புங்கை மரகன்றுகள் வழங்கும் நிகழ்வும் நடந்தது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் பொதுமக்களுக்கு புங்கை கொய்யா மாதுளை உள்ளிட்ட மர கன்றுகள் வழங்கியும் . வீடுகளிலும் நடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கொளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை வழக்கறிஞர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி சிகரம் இயக்குனர் சுரேஷ் குமார் , அன்பியத்தின் செயலாளர் சேவியர் அமைப்பின் மகளிர் பிரிவு இணை செயலாளர் அல்லி கொடி விளையாட்டு பிரிவு செயலாளரும், தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான டி.சுரேஷ் பாபு விளையாட்டு பிரிவு இணை செயலாளரும், குத்துச்சண்டை பயிற்ச்சியாளருமான எழில் மணி. சமூக செயற்ப்பாட்டாளர்கள் ஆனந்தி சொளந்தரம் சிபு நிவரஞ்சனி சிலம்பம் மாஸ்டர் பார்த்திபன் சிலம்ப மாணவிகள் திவ்யபாரதி,ரேகா. பரமேஸ்வரி, ஜோஸ்பின்மேரி. ஷாம்பவி, தீக்சிதா மாணவர்கள் ஆரோக்கியசீமோன், இஸ்லாம் ஹனிபா, நியூமேன் ராஜ், விஜய் வம்சி, கிருஷ்ணா மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.