பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்த தான முகாம்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் எழிலன் ஆலோசனையின் படியும் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (23.03.2023) நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் தலைமையேற்று இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஒரத்தநாடு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாவது ஆளாக தானாக முன்வந்து இரத்த தானம் செய்தார். இந்த ரத்ததான முகாமில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வாசுகி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் தவசந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் கற்பகம் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.

