முசிறி அருகே
பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.
முசிறி அருகே உள்ள அழகு பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தைகளுடன் பொன்னாங்கண்ணிப்
பட்டி பகுதியில் நடைபெற்று வரும் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு இரவு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்க பணம், 3 பவுன் செயின் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக முசிறி போலீசில் மணிமாறன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.