திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் முருகையா தேவர், நிர்வாகிகள் காசிமாயதேவர் மாலைத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏழை,எளிய மக்களை பாதிக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர் விலையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பனியன் தொழிலும், விசைத்தறி தொழிலும் பாதிக்கிறது. எனவே அதன் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை குறைக்க வேண்டும்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு வை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் விலை உயர்வை தடுக்க வேண்டும்.
கிராம புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.