காகித கோப்பைகளில் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை.
காகித கப்புகளால் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
திருச்சி காஜாமலை அல்- ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழா மற்றும் நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டினை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளின் தனித்திறன்களை நிரூபிக்கும் வகையில் ஒரு உலக சாதனை முயற்சிக்கு திட்டமிடப்பட்டு காகித கோப்பைகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி உருவாக்கிய அணி என்ற சாதனை முயற்சிக்கு திட்டமிட்டது .
இதன்படி சுமார் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகித கோப்பைகளில் வர்ணம் பூசி 22. 5 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்தில் இந்திய தேசியக் கொடியினை பிரம்மாண்டமாக உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி அந்நாட்டு தேசிய கொடியை 124 சதுர மீட்டர் பரப்பளவில் செய்து உலக சாதனை படைத்தது தற்போது இப்பள்ளியில் 337.5 சதுர மீட்டரில் இந்திய தேசிய கொடியை உருவாக்கி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.
எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடி கேட்டர் அமித் ஹிங் ரோனி மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் முன்னாள் அசோசியேட் எடிட்டரும் மற்றும் மூத்த சாதனை பதிவு மேலாளருமான ஜெகன்நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் ஜனாப் முகமது ஆரிஃப், செயலாளர் அஹமதுல்லாஹ் ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த சாதனை முயற்சியில் ஜமாலி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.