
திருச்சியில் இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த நபரை பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பர்ஜானா (29 வயது) இளம்பெண். இவருக்கு ஏற்கனவே அக்பர் அலி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை விபத்தில் இறந்து விட்டது. பின்னர் அக்பர் அலியும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். மற்றொரு குழந்தை அக்பர் அலியின் அம்மாவிடம் வசித்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் சிபாரிசு மூலம் மேலப்புதூர் தபால் நிலையம் அருகில் உள்ள ஒரு சர்ச்சில் ஹவுஸ் கீப்பிங் வேலை அந்த இளம் பெண்ணிற்கு கிடைத்துள்ளது. அதன் மூலம் அந்த இளம் பெண்ணும், ஆனந்தும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் செந்தண்ணீர்புரம் பாரதி தெரு அன்னை இல்லத்தில் ஒரு வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக உல்லாசமாக இருந்த பல வீடியோக்களை இளம்பெண்ணுக்கு தெரியாமல் ஆனந்த் எடுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் பழகிய விஷயம் ஆனந்தின் மனைவிக்கும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் பர்ஜானாவிற்கு தெரிய வந்தபோது ஆனந்தை விட்டு விலகி செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் ஆனந்த் உல்லாசமாக இருந்த வீடியோக்களை அவரிடம் காட்டி மிரட்டி கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூருக்கு அழைத்து சென்று தனியாக குடித்தனம் வைத்து அங்கே இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக ஏற்கனவே ஆனந்தின் மனைவி ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆனந்த் மற்றும் பர்ஜானா மீதும் புகார் அளித்திருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் போலீசார் ஆனந்திடமிருந்து இளம்பெண்ணை மீட்டு உரிய அறிவுரைகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த இளம் பெண் சம்சுதீன் என்பவருடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதனை அறிந்த ஆனந்த் மீண்டும் அவரை உல்லாசமாக இருக்க அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டி அந்த இளம் பெண்ணிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த இளம் பெண் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கார்த்திகாவிடம் புகார் அளித்தார். பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்த் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

