Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 18ஆம் தேதி 500 பேருக்கு தமிழ் வார்த்தையை டாட்டூவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி

0

'- Advertisement -

 

வருகிற பிப்ரவரி 18-ம் தேதி திருச்சியில் தமிழ் எழுத்தை டாட்டுவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி:

திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு பகுதியில் எக்ஸ்ட்ரீம் டாட் டு ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் முத்துக்குமார். இவர் டாட்டு ஓவியத்தில் வேர்ல்ட் ரெக்கார்ட் படைப்பதற்காக வருகிற பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எக்ஸ்ட்ரீம் டாட்டூ ஸ்டூடியோ சார்பில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள விவிட் ஹோட்டலில் தாய்மொழியாம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக இலவசமாக 500 தமிழர்களுக்கு தமிழ் எழுத்தை டாட்டூவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து எக்ஸ்ட்ரீம் டாட்டூ ஸ்டூடியோ உரிமையாளர் முத்துக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வரும் 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நான் நமது தாய் மொழி தமிழை பெருமைப்படுத்தும் விதமாக 500 பேருக்கு தமிழ் என்ற வார்த்தையை இரண்டு இன்ச் அளவுக்கு இலவசமாக டாட்டூவாக வரைய உள்ளேன்.

தாய்மொழி தினத்தன்று அனைவரும் பொது தளத்தில ஒரு போஸ்ட் மட்டும் செய்வார்கள் நான் எனது தொழில் ரீதியாக ஒரு 500 பேருக்கு தமிழ் வார்த்தையை டாட்டூவாக வரைந்தால் அது ஒரு அஞ்சு லட்சம் பேரை சென்று அடையும்.

கடந்த மூன்று வருடங்களாக இந்த உலக சாதனைக்காக நான் முயற்சி செய்தேன் ஆனால் 2020-ல் கொரோனாவால் நிராகரிக்கப்பட்டது. 2021 லும் நிராகரிக்கப்பட்டது
இந்த வருடம் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி உள்ளேன்.இந்த நேரத்தில் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.எனவே வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் V1V|Dல் 500 பேருக்கு தமிழ் என்ற வார்த்தையை இரண்டு இன்ஞ் அளவுக்கு டாட்டூவாக வரைந்து உலக சாதனை செய்ய உள்ளேன். அனைவருக்கும் சுகாதாரமான முறையில் தனித்தனி ஊசி, தனித்தனி இங்க் கப்பு பயன்படுத்தப்படும்.

எனவே அனைவரும் முன் பதிவு செய்து கொள்ளவும். இதுவரை 300 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என கூறினார்.

முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 70103 43009

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.