Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி அண்ட் ஓ உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோவிந்தராஜுலு மனு.

0

'- Advertisement -

 

D & 0 உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வணிகர் சங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜீலு மனு

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய D &O உரிமக் கட்டணத்தை பிப்ரவரி 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பதற்கு கால நீட்டிப்பு வழங்க கோரியும், குப்பை வரி உள்ளிட்ட மாநகராட்சி தொடர்பான சில கோரிக்கைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ. கோவிந்தராஜூலு தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.

பிரதான கோரிக்கையான D&O உரிமக்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 14 என்பதை மார்ச் 31 வரை நீட்டித்தும் அதற்கான அபராத தொகையை வசூல் செய்ய மாட்டோம் என்பதை தெரிவித்து, குப்பை வரி உள்ளிட்ட இதர பிரச்சனைகலுக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் ஆணையரிடம் தெரிவித்தார். வியாபாரிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆணையருக்கு பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், செயலாளர் செந்தில் என். பாலு, பொருளாளர் தங்கராஜ், மாநிலத் துணைத் தலைவர் என்.ரெங்கநாதன், மாநில இணைச்செயலாளர்கள் குணா, கமலக்கண்ணன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளர் கே.எம் எஸ். மைதீன், பொருளாளர் பா. திருமாவளவன், துணை செயலாளர் ஷேக் அலாவுதீன், அரிசி ஆலைகள் சங்க செயலாளர் சிவா, துணைத் தலைவர் கேசவன், மளிகை மண்டி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்லன், திருச்சி மாவட்ட பேக்கரி அசோசியேஷன் தலைவர் வைத்திலிங்கம் செயலாளர் அருண் பாலாஜி, ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராஜன், ஸ்ரீரங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் வடிவேல், திருவானைக்காவல் சங்க செயலாளர் கருப்பையா, மற்றும் தசரதராமன், எடமலைப்பட்டி புதூர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முகமது மீரான், மிளகு பாறை பொன்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.