திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
தலைமை ஆசிரியையின் கணவர் திடீர் தற்கொலை.
திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 59)இவரது மனைவி காயத்ரி( 57).
இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹிந்துஸ்தான் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. பின்னர் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியை காயத்ரி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.