திருச்சி காந்தி மார்க்கெட் அருகே
சொகுசு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம்.
தப்பி ஓடிய புரோக்கருக்கு வலை.

திருச்சி பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் 2 இளம் பெண்களை வைத்து ராஜேஷ் என்பவர் விபச்சாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (வயது 21) என்பவரை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சீவி உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
அங்கு திருவள்ளுவர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அப்பாவி இளம் பெண்களை சொகுசு வீட்டில் வைத்து விபச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 2 பெண்களையும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கு இடையே போலீசார் வருவதை தெரிந்து கொண்ட புரோக்கர் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.தப்பிய புரோக்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.