
17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி
திருச்சி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது.
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26) இவர் முன்னாள் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக சிறிது காலம் பணியாற்றினார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவரை ஏமாற்றியதாக தெரிகிறது. இந்தநிலையில் அந்த சிறுமியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் இத்தொடர்பாக அந்த சிறுமி வினோத்திடம் கேட்டபோது அவரை கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து திருவரங்கம் மகளிர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

