கிங் பவுண்டேஷன் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா .
திருச்சி பாலக்கரையில் இயங்கி வரும் கிங் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அன்னதானம்,
ரத்ததான முகாம்,இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாலக்கரை பகுதியில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது .
இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தை தமிழ்நாடு பத்திரிகை- ஊடக பாதுகாப்பு சங்க தலைவர் அல்லூர் சீனிவாசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் , செபாஸ்டியான் , ஜெயபாலன் , கோபிநாத் , வீரதுரை , ஜேகே , காந்தி , ராஜேந்திரன் , முத்துக்குமார் , சிலம்பரசன் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
முடிவில் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயன் அனைவருக்கும் நன்றி கூறினார்