திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மோதல்- பரபரப்பு
இங்கு விவாதம் வேண்டாம். கலெக்டர் உத்தரவு.
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அயிலை சிவசூரியன்:-
பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவித்த தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வீரசேகரன்:-
பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தொகை உயர்த்தி வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் பிரதீப் குமார்:-
முகாம் போடப்பட்டு போடப்பட்டு அதன் மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் .
வீரசேகரன்:-
செறிவூட்டப்பட்ட அரசி வழங்கும் திட்டம் தேவையில்லாதது பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்த திட்டத்துடன் தொடர்புடையது உள்ளது எனவே மத்திய மாநில அரசுகள் ஆராய்ந்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்
அப்போது தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு எழுந்து குறிக்கிட்டு, நீங்கள் பா.ஜ.க.த்தானே நீங்களே நிறுத்தி விடலாமே என்று கூறினார்.
அதற்கு விவசாய சங்க தலைவர் வீரசேகரன் பதிலளிக்கையில், நாங்கள் பா.ஜ.க. அல்ல .விவசாய சங்கம் என்று கூறினார் .
இருவரின் கட்சி சார்ந்த விவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கலெக்டர் பிரதீப் குமார் குறிப்பிட்டு இந்த இடத்தில் இந்த விவாதம் தேவையில்லை. நிறுத்துங்கள் என்றார்.
உடனடியாக விவாதத்தை நிறுத்தினர். பின்னர் கூட்டம் நடந்தது. கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்,அதற்கு அதிகாரிகள் பதிலளித்தனர் .
இந்த மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.