Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநில அளவிலான நடன போட்டியில் பங்கேற்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பிய எஸ்.ஆர்.எம்.யூ கோட்ட செயலாளர் வீரசேகரன்.

0

'- Advertisement -

 

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையேயான கலை திருவிழா நிகழ்ச்சி கடந்த மாதம் முழுவதும் நடைபெற்றது.

இந்த கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

அந்த ஒரு வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை மேல காலனி பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 8 மாணவர்கள் பொது நடனத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 50 நடனக் குழுக்கள் பங்கேற்று அதில் தஞ்சை திருமங்கலக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

இதை அடுத்து மாநில அளவில் நாளை கோவையில் நடைபெற உள்ள நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 5 பயிற்சியாளர்களுடன் 8 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.

ரயிலில் கோவைக்கு புறப்பட்ட மாணவர்களை எஸ்.ஆர்.எம்.யு மாநில துணை பொது செயலாளரும் திருச்சி கோட்டச் செயலாளருமான வீரசேகரன் மாணவர்களை சந்தித்து வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.