Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அறிவிப்பு.

0

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி . 10 முதல் 26 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி ‘குரூப் 2’ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன. குரூப் 1’ல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் உள்ளன. இந்திய அணி பிப். 12ல் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை (இடம்: கேப்டவுன்) சந்திக்கவுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 15), இங்கிலாந்து (பிப். 18), அயர்லாந்து (பிப். 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா , ரிச்சா கோஷ் , ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே.

Leave A Reply

Your email address will not be published.