மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீர்ரகளுக்கு உற்சாக வரவேற்பு
திருவாரூர் வா.சோ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இளம் சிலம்ப வீராங்கனை மோ.பி.சுகித்தா தலைமையிலான திருச்சி உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சிலம்ப மாணவ மாணவிகள் கலந்து கொண்டு முகமது அயான், பால விக்னேஷ், சுவாதி மற்றும் சுகித்தா ஆகியோர் முதல் பரிசும்
முகேஷ்வரன், ஜோயல், ரித்விகா சார்வி மற்றும் நிஷாந்தினி ஆகியோர் இரண்டாம் பரிசும்
இஷா சார்வி, ஆஷிகா நந்தினி, மாதினி, கமலேஷ், ஜெப்ரின் மற்றும் கிஷாந்த் ஆகியோர் மூன்றாம் பரிசும் கோப்பைகளையும் வென்றனர்.
வேன் மூலமாக திருச்சி வந்த சிலம்ப வீரர்களை உலக சிலம்ப இளையோர் சம்மேளன துணைத் தலைவர் மோகன், தமிழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் என்.கே.ரவிசந்திரன் மற்றும் பெற்றோர்கள் வரவேற்று வாழ்த்தினார்கள்.