திருச்சி கோட்ட ரயில்வே
பி ஆர் ஓ பொறுப்பெற்பு.
திருச்சி கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பாளராக வினோத் ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்ட
ôர்.
திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் கடந்த சில ஆண்டுகளாக காலியாகவே இருந்து வந்தது. பொருப்பு அலுவலர்களே பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக வினோத் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஐ. செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை காலை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு அவர் தலைமை மக்கள் தொடர்பு ஆய்வாளராக பணியாற்றினார். மேலும் 2016 முதல் 2022 வரை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையின் பல்வேறு மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.