விலைவாசி உயர்வை கண்டித்து
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் டி யு சி சி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் .
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்வதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 27,000 வழங்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் டி யு சி சி தொழிற்சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் தொழிற்சங்க பேரவையின் மாவட்ட செயலாளர் மாலைத்துரை வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் முருகையா தேவர், காசிமாய தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மோகன், காஜாமலை கிரி, பூரணகுமார் விஜய் தீபன், பிரேம், ராஜா, தமிழ்மாறன், கருப்பையா, குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி நன்றி கூறினார்.