மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் இன்று
மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
டி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
அகில
இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் உத்தரவின் படி சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கும் மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி. குணசேகரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சி.எம். சின்னசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. சந்திரசேகரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சுருளி நீலகண்டன், பாஸ்கர், கார்த்திகேயன், துரை பாலகிருஷ்ணன், ஜான்சன், கவியரசு, மோகன்ராஜ், மாயி பாலு, மகளிர் அணி சுதா திருமேனி, செல்லத்துரை, மாரியப்பன், மண்ணை பாஷா, தொட்டியம் சரவணன், வடிவேல், ஜோதி, பாண்டியன், லால்குடி, விஜயகுமார், மாத்தூர் முனீஸ்வரன், பாலசுந்தரம், குமரானந்தம்,தினேஷ், ஜோசப் ராஜா, பழனியாண்டி, கஸ்டம்ஸ் ஜெயரத்தினம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
குடிக்காதே.. குடிக்காதே குழந்தைகளின் எதிர்காலத்தை கெடுக்காதே. மூடிவிடு மூடிவிடு மது ஆலைகளை மூடிவிடு. போதை பொருட்களை தடை செய். போராடுவோம் போராடுவோம் மதுவிலக்கு அமல் படுத்தும் வரை போராடுவோம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மதுவிலக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.