திருச்சியில் பெரியாரின் 49 வது நினைவு நாளில் சீனிவாசன் தலைமையில் மாநகர அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் மாநகர அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
.
இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், பகுதி செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன், கலைவாணன் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ்பாண்டின் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.