திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருகின்ற 24-12-2022 சனிக்கிழமை அஇஅதிமுக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகம் சார்பில்
அந்தந்த பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கும், திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும்,
இந்த நிகழ்வுகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்ஜி.ஆர். இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக் கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, கலை பிரிவு, வர்த்தக அணி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கணைகள் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.