Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

29 ஆம் தேதி முதல்வர் திருச்சி வருகை:மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்.

0

29 -ந் தேதி முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்.

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தர உள்ளார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி,அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

அவரது வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசு விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா .சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்வின் போது
மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி கிழக்கு மாநகரக் செயலாளர் மதிவாணன், கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல், இளைஞரணி சிங்காரம்,பகுதி செயலாளர்கள் நாகராஜ், காஜாமலை விஜய்,கொட்டப்பட்டு தர்மராஜ்,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியூல்லா, அவைத் தலைவர்
கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன், மாவட்டக் பொருளாளர் குணசேகரன், பகுதிச் செயலாளர்கள் நீலமேகம், மணிவேல், ஏ. எம்.ஜி.விஜயகுமார், மோகன், ராஜ்முகமது சிவா பாபு, மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார் மற்றும் திரளான தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.