திருச்சியில் 4 செல்போன் கடைகளில் நடந்துள்ளது. வரகனேரி செல்போன் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற போது
சப்தம் கேட்டு பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
திருச்சி ,
வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை
உள்ளது. இந்த கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அப்போது ஷட்டர் உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் தப்பியது.இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரச மரத்தடியில் உள்ள நூர் என்பவரது செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ. 4000 பணத்தை திருடி சென்றுவிட்டனர். மேலும் அருகருகே உள்ள இரண்டு செல்போன் கடைகளை உடைத்து கொள்ளையர்கள் செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி மார்க்கெட்டில் இன்று அதிகாலை காய்கறி வாங்க வந்த ரவிச்சந்திரன் என்பவரின் இரு சக்கர வாகனம் திருட்டு போனது. இது குறித்த புகாரின் அடிப்படையில்
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.