திருச்சி உறையூரில்
கார் டிரைவர் மாயம்
திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் குமரன் (வயது 40) கார் டிரைவர்.
இவர் பல இடங்களில் கடன் வாங்கி விட்டு பணத்தை திருப்பி தராமல் மிகவும் சிரமப்பட்டார் என தெரிகிறது.
இதனால் குமரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி ராமலட்சுமி உறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன டிரைவர் குமரனை தேடி வருகின்றனர்.