திருச்சி மொராய்ஸ் சிட்டியில் ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியை 65,000 மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், மனைவியும் மொராய்ஸ் சிட்டி இயக்குனருமான பிரியா மொராய்ஸ் ஆகியோர் ஆண்ட்ரியாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த இசை விழாவில் போதை விழிப்புணர்வு தொடர்பான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காணொளி காட்சி இடம்பெற்றது.
திருச்சியில் முதல்முறையாக நடந்த இந்நிகழ்ச்சியினை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.