நங்கவரத்தில் நாளை தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம்.
வரக்கூடிய 2023 புத்தாண்டில் கொரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளன. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இயற்கை சீற்றங்களால் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும், *ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும்
மத்திய, மாநில அரசுகளால் நாட்டு மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை மேம்படுவதற்காகவும் ஸ்ரீதட்சண காளி சித்தர் பீடம் (சம தர்ம ஞான சன்மார்க்க அறக்கட்டளை) சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பவுர்ணமி தினமான
டிசம்பர் 7-ம் தேதி (நாளை) மதியம் 2 மணிக்கு நங்கவரம் தென்கடைகுறிச்சியில் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணியன் நம்பூதிரி (எ) தேஜஸ் சுவாமிகள் காற்று புக முடியாத, பாதாள அறைக்குள் சமாதி நிலைக்குச் சென்று பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் உயிருடன் வரக்கூடிய சமாதி தியானம் மேற்கொள்ள உள்ளார்.
இதில் பக்த கோடிகள் திரளாக பங்கேற்று இறைவனின் அருள்பெற அழைக்கிறோம்.
என்றும் இறைப்பணிக்காக..
ஸ்ரீதட்சணகாளி சித்தர் பீடம்
தொடர்புக்கு.. 8438038030