திருச்சியில் மாவட்ட அளவிலான 14வது சப் ஜூனியர் ஹேண்ட்பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி எம்.பி.பரிசுகள் வழங்கினார்.
திருச்சி
மாவட்ட அளவிலான 14-வது சப்-ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.
போட்டி தொடக்க விழாவில் எஸ்.பி.ஐ .ஓ.ஏ பள்ளி தாளாளர் கணபதி சுப்ரமணியன், முதல்வர் முத்துராஜன், திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேசன்
துணைத் தலைவர் , ஸ்டான்லி வினோத் செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 பள்ளி அணிகளும், பெண்கள் பிரிவில் 15 பள்ளி அணிகளும் பங்கேற்றுள்ளன.
சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்சி கே.கே.நகர் மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி பிடித்தது,
இரண்டாம் இடத்தை எஸ்.பி.ஐ.ஓ.ஏ மேல்நிலைப் பள்ளி, மூன்றாம் இடத்தை எஸ்.ஆர்.வி.பள்ளியும் நான்காவது இடத்தை ஏ.கே.கே.வி மேல்நிலைப் பள்ளியும் பிடித்தது.
பெண்கள் பிரிவில் முதலிடத்தை எஸ்.பி.ஐ.ஓ.ஏ. சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடத்தை . எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடத்தை செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் , நான்காவது இடத்தை லால்குடி அரசு. மேல்நிலைப்பள்ளியும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சுழற்க்கோப்பை மற்றும் பரிசுகளும் சான்றிதழ்களையும் வழங்கினார்.