ஐயரீஸ்வரர் கோயில் கல் தூண்களை பாதுகாக்க இந்து சமய அறநிலைத்துறைக்கு வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
கலைநயமிக்க கல்தூண்களை கந்தர்வகோலம் செய்யும் திருவையாறு ஐயரீஸ்வரர் கோவில் நிர்வாகம்.
நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை, வழக்கறிஞர் கிஷோர் குமார்.
திருவண்ணாமலை தெற்கு கட்டை கோபுர பாதுகாப்பிற்காக, கோபுரத்திலுள்ள காவல் தெய்வத்தின் முகத்தை சிதைத்து கேமரா பொருத்தியது பூதகரமாகி அடங்குவதற்குள்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் வீற்றிருக்கும் ஐயரீஸ்வரர் திருக்கோவில் வளாகத்திலுள்ள கலைநயமிக்க தூண்களில் காணப்படும் சிலைகளின் கலைநுட்பம் தெரியாத கோவில் நிர்வாகம்_மேற்படி தூண்களில் உள்ள சிலைகளை மறைத்து இரும்பு ராடுகளை பொருத்தி
கரன்ட் கம்பியில் சுண்ணாம்பு தேய்த்து வைப்பது போல் மேற்படி தூண்களை சிதைத்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமி சிலைகள் பாதுகாப்பிற்காக தான் மேற்படி இரும்பு கேட் அமைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தை தெரிவித்தாலும் ஒன்றை அழித்து தான் மற்றொன்றை பாதுகாக்க முடியுமா….?
எனவே இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் அவர்கள் உடனடியாக மேற்படி திருக்கோவில் வளாகத்தில் கலைநயமிக்க தூண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.என வழக்கறிஞர் கிஷோர்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.