திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ தலைமையில் அன்னதானம்.
திருச்சியில் தி.மு.க இளைஞர் அணிசெயாலளர் உதயநிதி ஸ்டாலின் பிறத்தநாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேருவின் உத்தரவின்பேரில் உறையூர் பகுதி திமுக செயலாளர் இளங்கோவின் ஏற்பாட்டின்படி அவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உறைந்தை கல்நாய்க்கன் தெருவில் உள்ள ஆர்.சி. பள்ளிகூடத்தில் திமுக கொடி, தோரணங்கள் கட்டி, பந்தல் போட்டு பொதுமக்களுக்கு இனிபபுகள் வழங்கி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கபட்டது.
மேலும் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று
பகுதி செயலாளர் இளங்கோ , பேசியதாவது:
வரும் பாரளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றகழக்த் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற இந்தபகுதி நிர்வாகிகள், தொண்டார்கள் பாடுபட வேண்டும் என்று கூறினார்,
நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் திருநாவுக்கரசு, கமால் , ஹரிகரன். ராஜா,பகுதி நிர்வாகிகள் ,ஆசைதம்பி, கருணா மூர்த்தி, செந்தில. கங்காதரன். சிவா, சரவணன் மற்றும் பொதுமக்கள். நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானனோர் திரளாக கலந்துக்கொண்டனர்.

