மக்களுக்கான முதல்வர் வருவதால் மக்கள் குறைதீர்பு கூட்டம் ரத்து என்பது ஏற்புடையதல்ல. மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்.
“மக்களுக்கான முதல்வர் திருச்சி வரும் பொழுது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து ஏற்புடையதா..??? வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி.
திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்குமான அரசு மக்களுக்கான அரசு என மேடை தோறும் முழங்கி வருகிறார் தமிழக முதல்வர்.
ஆனால் தமிழக முதல்வர் நாளை [28.11.2022]ந் தேதி திருச்சி வருகையை காரணம் காட்டி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஏற்புடையதாக இல்லை.
மேலும் இது போன்றே கடந்த காலங்களில் மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்த பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சுட்டிகாட்டியதோடு மேயர் மற்றும் ஆணையர் அலுவல் பணியில் இருந்தால் அடுத்த நிலையில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளை கொண்டோ அல்லது அடுத்த வேலை நாட்களிலோ மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்தோம்.
ஏனெனில் இவ்வாறு தான் மாவட்ட ஆட்சியர் மாற்று அலுவல் பணியில் உள்ள பொழுது டிஆர்ஓ ரேங்க் அதிகாரி தலைமையில் மாவட்ட ஆட்சியரகங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தபடுகிறது. ஏன் அதே நடைமுறையை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பின்பற்றக்கூடாது…???
என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எல்.ஆர்.கிஷோர்குமார் கேட்டுள்ளார்.

