திருச்சியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை திறப்பு விழாவை முன்னிட்டு 2 மாதம் இலவச கண் இலவச பரிசோதனை. நிர்வாக இயக்குனர் அறிவிப்பு.
திருச்சியில் திறப்பு விழாவை முன்னிட்டு இரண்டு மாதத்திற்கு முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் முற்றிலும் இலவசம்.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அறிவிப்பு.
கோயமுத்தூரை தலைமை இடமாகக் கொண்டு கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தனது 16 வது கிளையை திருச்சியில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் கிளைகளை நிறுவி மருத்துவ சேவை அளித்து வரும் இந்த நிர்வாகத்தின் புதிய மருத்துவமனை திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு மூன்று அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அறைகள், 6 மருத்துவ ஆலோசனை அறைகள், ஐந்து பரிசோதனை அறைகள், நவீன கண் கண்ணாடி சேவை ,மருந்தகம் என அனைத்து வசதிகளையும் கொண்டு உள்ளது.
இந்த மருத்துவமனையில் நோயாளிகள் தங்கும் அறை, பகல் நேர நோயாளின் ஓய்வாறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளது .
இது குறித்து ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி. ராமமூர்த்தி கூறும் பொழுது:
தேசிய அளவில் தரமான கண் மருத்துவத்திற்கு ஒரு பூர்த்தி செய்யப்படாத தேவை இருந்து கொண்டே இருக்கின்றது.
திருச்சி மாவட்டமும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறும் பொழுது இந்த மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள் 200 அனுபவம் மிக்க ஆடப்டோமெட்டிஸ்ட் மற்றும் 650 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்படும் நாங்கள் மொத்தம் 16 கிளைகளை நிறுவி சிறப்பாக மருத்துவ சேவை அளித்து வருகிறோம்.
கடந்த 35 ஆண்டுகளாக இந்த ஐ பவுண்டேஷன் சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து உள்ளது. நாட்டிலேயே பல நவீன கண் சிகிச்சை முறைகளை முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெருமையும் கொண்டுள்ளது.
தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் முன்னோடியாக திகழும் நாங்கள் எங்களது அனைத்து மருத்துவ மையங்களும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் இழைக்கப்பட்டிருப்பதால் நோயாளிகளின் பரிசோதனை அறிக்கை, மருத்துவ ஆலோசனை, மெடிக்கல் ஹிஸ்டரி, ஆய்வுகள் மற்றும் அவர்களின் முழு விவரங்களையும் ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் எந்த ஒரு மையத்தில் இருந்தும் மருத்துவர்கள் பார்த்து சிகிச்சை அளிக்க உதவுவது மட்டுமல்லாமல் அனுபவிக்க அவர்களின் ஆலோசனையும் சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் டாக்டர் M. S. அஷ்ரப், முன்னாள் தேசிய துணைத் தலைவர் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு,
டாக்டர். முகுந்தன் கோபாலன், நிர்வாக இயக்குநர், ஏபிசி மருத்துவமனை
டாக்டர் எஸ். மணிவண்ணன், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்
டாக்டர் டி. ராமமூர்த்தி, தலைவர், கண் அறக்கட்டளை,
டாக்டர். ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி, நிர்வாக இயக்குனர், கண் அறக்கட்டளை,
டாக்டர். ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி, நிர்வாக இயக்குனர், கண் அறக்கட்டளை உள்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.