Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சூரியகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா எளிதான வெற்றி.

0

'- Advertisement -

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இன்று 2வது போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட் ,இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இஷான் கிஷான் அதிரடியாகி விளையாடினார்.மறுபுறம் பண்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களில் வெளியேறினார் . அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ,ஹார்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாடினர்.
குறிப்பாக சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்தார்.பின்னர் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய டிம் சவுதி , பாண்டியா ,தீபக் ஹூடா ,வாஷிங்டன் சுந்தர் என தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் வீழ்த்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 191ரன்கள் எடுத்தது சூர்யகுமார் யாதவ் 11 பவுண்டரிகள், 7 சிக்ஸர் என 111ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.. தொடக்கத்தில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பின் ஆலன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.பின்னர் டெவன் கான்வே ,கேன் வில்லியம்சன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.கான்வே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்தார்.அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 18.5 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் இந்திய அணி65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணியில் தீபக் ஹூடா 4 விக்கெட்டும் ,சிராஜ் ,சாஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர் .
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது,
3வது போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் சதம் அடித்த சூரியகுமார் யாதவ் நியூசிலாந்து மண்ணில் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.