சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 86வது நினைவு நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி கோர்ட் எதிரில் உள்ள வ.உ.சி திருஉருவ சிலைக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, இளைஞரணி சிந்தை முத்துக்குமார், கவுன்சிலர்கள் அரவிந்தன். அம்பிகாபதி,மற்றும் வண்ணாரப்பேட்டை ராஜன், என்ஜினியர் ரமேஷ், ரோஜர். ரமணிலால், பொன் அகிலாண்டம், வட்டச் செயலாளர் வினோத், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.