மல்லியம் பத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து விக்னேஸ்வரனை நீக்கம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மல்லியம்பத்து ஊராட்சி மன்ற
தலைவர் விக்னேஸ்வரன் பதவி நீக்கம்
மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.
திருச்சியில், மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஸ்வரன் நிர்வாகக் காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது மல்லியம்பத்து ஊராட்சி. பொதுவாகவே ஊராட்சி நிர்வாகங்களில், வரிவசூல், கட்டட வரைபட அனுமதி (பிளான் அப்ரூவல்) உள்ளிட்டவைக்கான கட்டணங்களை செலுத்தினால் அவற்றுக்கான ரசீதுகள் கணினிமூலமாக வழங்குவதில்லை. நேரடியாக செலுத்தி ஊராட்சி தலைவர்கள், எழுத்தர்கள் வைத்துள்ள தனித்தனி ரசிது புத்தகங்களைக் கொண்டு வரி வசூல் செய்து ரசீதுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியம் , மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி , குடிநீர் வரி , தொழில் வரி மற்றும் பல வகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து ஊராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து விக்ளேஸ்வரனுக்கு ஒர் நோட்டீஸ் அனுப்பி, 15 நாள்களில் விளக்கம் கோரப்பட்டது. உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203 ன் கீழ் ஊராட்சி தலைவருக்கான காசோலை (செக்) வழங்கும் அங்கீகாரமும் பறிக்கப்பட்டது.
இதற்கிடையே விக்னேஷ்வரன் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ,
உரிய விளக்கம் அளிக்காததால் ஏன் பதவி நீக்கம் செய்யக் கூடாது எனவும் அவருக்கு கேள்வியும் எழுப்பப்பட்டது. விக்னேஷ்வரனிடம் விளக்கம் கோரப்பட்டு 4 மாதமாகியும் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட வில்லை எனக்கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 205 ( 1 ) ன் கீழ், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, மல்லியம்பத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
அது தொடர்பான அறிக்கையை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகர், மாவட்ட ஆட்சியரிடம் சமாப்பித்தார்.
இந்நிலையில் மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரனை பதவி நீக்கம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், விக்னேஷ்வரனுக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறியிருப்பது:
ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பான அறிக்கையை பரிசீலனை செய்ததில் மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர், நிதி முறைகேடுகள் மற்றும் பொறுப்பில் முறையாக செயல்படாமலும் உள்ள குறைபாடுகள் வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளது. எனவே அவர் தொடாந்து அந்த பதவியில் இருப்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும் , பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாகவும் அமையும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், பொது நலன் கருதி, 1994 ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 , உட்பிரிவு 11 ன்படி, 15.11.2022 முதல் மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார், என அந்த கடிதத்தில் ஆட்சியர் மா. பிரதீப்குமார் குறிப்பிட்டுள்ளார்.