இன்று முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று திருச்சி மன்னார்புரம் இந்தியன் பேங்க் காலனியில் உள்ள கிளவுட் நயன் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இப் பள்ளியின் தாளாளர் ஷோபா ஜோக்கின் தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மழலை குழந்தைகள் ஜவகர்லால் நேரு,ஸ்பைடர் மேன்,ராணுவ வீரர்கள் மற்றும் தலைவர்கள் போன்று வேடங்கள் அளிந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.