பெண்ணையும் மண்ணையும் காக்கும்
மூலிகை நாப்கின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பெண்ணையும் மண்ணையும் காக்கும் மூலிகை நாப்கின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.
நூலகர் புகழேந்தி வரவேற்றார். திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஆஷா பர்கர் முன்னிலை வகித்தார்.
பெண்ணையும் மண்ணையும் காக்கும் மூலிகை நாப்கின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்வில் கௌசி நிஷா பேசுகையில்:
மாதவிடாய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த முறையில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். பெண்கள் பயன்படுத்தும் நாப்கினைப் பொறுத்தவரை, நாப்கின்களில் உதிரத்தை லாக் செய்யும் ஜெல், ஈரம் கசியாமல் தடுக்கும் பிளாஸ்டிக் உறை, நறுமணமூட்டி, ப்ளீச்சிங் ஏஜென்ட்கள், கம் மற்றும் பிற பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.ரசாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட நாப்கினை, நீடித்த நேரம், பல ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் ஏற்படலாம்.
எனவே பெண்ணுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்யும் வகையில் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கை மூலிகை நாப்கின் நாப்கின்களை சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும். மூலிகை நாப்கினில் பருத்திப்பஞ்சு, துளசி, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பெண்களின் அத்தியாவசியத் தேவையில் நாப்கின் முக்கியமான ஒன்று. பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட நாப்கின் கழிவுகளால் சுற்றுப்புறம் மாசுபடுகிறது. மூலிகை நாப்கின் பெண்ணையும், மண்ணையும் காக்கிறது என்றார்.