திருச்சி பொன்மலை பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்படுமா..?
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கீழக்குறிச்சி பஞ்சாயத்தில் மாவடிகுளம் எதிரில், மைக்கேல் என்னும் முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பஞ்சாயத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை கட்டி வாடகை வசூல் செய்து வருகிறார்.
இதுகுறித்து, பலமுறை பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
பஞ்சாயத்துக்குட்பட்ட ரோடு என்பதால் 108 ஆம்புலன்ஸ், கழிவுநீர் வாகனம் மற்றும் பள்ளி, கல்லூரி பேருந்துகள் அந்த வழியே சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை சரியான முறையில் அளந்து, ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.