2024 ல் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்.திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் பேட்டி.
இந்திரா காந்தி துணிச்சலான தலைவர்.
ராகுல் காந்தி 2024 ல் பிரதமர் ஆவார்
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் நம்பிக்கை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி புத்தூர்
நால் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு இன்று (திங்கட்கிழமை) 24-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சோபியா விமலா ராணி, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பாப்பு பெஞ்சமின் இளங்கோ ஆகியோர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேட்ரிக் ராஜ்குமார் நிருபர்களிடம் கூறும்போது,
இந்த நாட்டிற்காக ரத்தம் சிந்தி தியாகம் செய்தவர் இந்திரா காந்தி. அவரது ஆட்சி காலத்தில் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி ஏற்பட்டது. மேலும் வங்கிகளை தேசிய மயமாக்கி, நில உச்சவரம்பு சட்டம் மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற துணிச்சலான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டதால் வறுமையில் இருந்து மக்கள் மேம்பட்டனர்.
தீவிரவாதத்தால் உயிரிழந்த இந்திரா காந்தியின் நினைவை போற்றுவோம்.
இளம் தலைவர் ராகுல் காந்தி தேச ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். 4 மாநிலங்களில் 1400 கிலோ மீட்டர்களை தாண்டி செல்லும் இந்த நடை பயணத்தில் மக்களிடம் ராகுல் காந்தி அன்பை விதைத்துக் கொண்டு செல்கிறார். வெறுப்பு அரசியலுக்கு மத்தியில் நடைபெறும் இந்த ஒற்றுமை பயணம் 2024 அவரை ஆட்சி கட்டிலுக்கு கொண்டுவரும்.
அப்போது நாட்டின் ஒற்றுமை பலப்பட்டு வீழ்ந்து கிடக்கும் தேசம் வளர்ச்சியை நோக்கி மேல் எழும் என்றார்.