திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்
தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகள்
வருகிற நவ 1,2 தேதிகளில் நடைபெற உள்ளது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் ஜமால் மேலாண்மை துறை ஏற்பாட்டில் தேசிய அளவிலான மேலாண்மை போட்டிக்கான டைகூன்ஸ் 2022 போட்டி வருகிற நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவிற்கு கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, துணை செயலாளர் அப்துல் சமத், உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குனர் அப்துல் காதர் நிகால் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை தாங்கிறார். ஜமால் முகமது கல்லூரியின் மேலாண்மை துறை இயக்குனர் சிவகுமார் வரவேற்று பேசுகிறார்.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நிப்பான் பெயிண்ட் கம்பெனியின் விற்பனை இயக்குனர் நடராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பிறகு மிகச்சிறந்த தலைமை செயலர், முதன்மையான மேலாண்மை குழு, மிகச் சிறந்த தொழில் முனைவோர், வணிக வினாடி வினா, மதிவள ஆற்றல் விளையாட்டு போட்டி, ஐபிஎல் ஏலம், தடவாட போட்டி, விளம்பர உத்தி, நிறுவன நடை போட்டி, பங்கு சந்தை போட்டி போன்ற பத்து வகையான போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் அகில இந்திய அளவில் 50க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிகள் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து (கொரோனா காலகட்டங்களை தவிர்த்து) நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் அர்மான் சாலிக், பேராசிரியர்கள் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து நடத்துகின்றனர். நவம்பர் 2ந் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக டெர்பி கிலோதிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஜய கப்பூர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார் என்று ஜமால் முகமது கல்லூரியின் செயலர் காஜா நஜிமுதீன், துணைச் செயலாளர் அப்துல் சமத் முதல்வர் இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் கூறினார்கள்.