திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது .
இந்தக் கூட்டத்தில் நவம்பர் 4ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா நன்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில்
மாநில, மாவட்ட, நிர்வாகிகள்:
மதிவாணன், சேகரன்,கொட்டப்பட்டு தர்மராஜ், வண்ணைஅரங்கநாதன், சபியுல்லா , கோவிந்தராஜன், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு,
குணசேகரன், நிலமோகம் ,மேகன் ராஜ்முகமது, மணிவேல், சிவா
மாநில,மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநகரகழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர் .