உலகக்கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்ற தீபக் சாஹர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதையடுத்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றனர்.பெர்த்-ல் உள்ள ஒரு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தொடர்நது தீவிர பயிற்சயில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்ற தீபக் சாஹர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்த நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.
மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.