
திருச்சியில் கத்தி முனையில் ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு
வாலிபர் கைது.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் லோடு ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் உள்ள குடோனில் சரக்குகளை இறக்கிவிட்டு இரவு வீட்டுக்கு சென்றபோது திடீரென அங்கு வந்த வாலிபர் ஒருவர் அப்துல் ரஷீத் வழிமறித்தார். பின்னர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவரது சட்டை பையில் இருந்த ரூ. 2750 பணத்தை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து ஓடி விட்டார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஓட்டுனர் அப்துல் ரஷீத் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தயாளன் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் லோடு ஆட்டோ ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டியவர் திருச்சி தில்லைநகர் வாமனம் பகுதியை சேர்ந்த வீரப்பன் என்கிற ராஜ்குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

