ஸ்ரீரங்கம் கீழவாசல்
பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா .
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் .
திருவரங்கம் கீழவாசல் பகவதியம்மன், மாணிக்க விநாயகர், பரிவார தெய்வங்கள் சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் கோயிலில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று (7ம்தேதி) நடந்தது. விழாவை முன்னிட்டு, 5ம்தேதி காலை வடகாவிரியில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருமஞ்சன தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அன்று மாலை, முதல் கால யாகசாலை பூஜையும், நேற்ற முன்தினம் (6ம்தேதி) 2,3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று (7ம்தேதி) காலை 6.15 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை தொடங்கி யும் மகா பூர்ணாஹூதி நடந்தது.
தொடந்து கடம் புறப்பாடகி, காலை 10 மணிக்கு மேல் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, ஓம்சக்தி, பராசக்தி கோஷங்கள் விண்ணதிர ஆலய மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்ககள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.